Ad Widget

திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு கட்டுப்பாடுகள்!!இரவில் ஊரடங்கைத் தொடரவும் ஆராய்வு!! சுற்றறிக்கை 1ம் திகதி வெளியாகும்!!

திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் அசேல குணவர்த்த வெளியிடுவார் என்று குறிப்பிடப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும்...

கொரோனாவின் 5 ஆவது அலையை தவிர்க்க வேண்டும் : அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என்பதால், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் ஐந்தாவது அலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே வீடுகளிலேயே தொற்றை இனங்காண்பதற்கான எளிமையான பரிசோதனை முறைமையை அறிமுகப்படுத்தல் , எழுமாற்று பரிசோதனைகளின் அளவை அதிகரித்தல், வினைத்திறனான தடுப்பூசி வழங்கல், மூன்றாம் கட்ட தடுப்பூசி, பிறழ்வுகளை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்தல்...
Ad Widget

உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு- மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை...

சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை!!

சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். குறித்த 5 அம்ச கோரிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளதாவது, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!!

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். எனினும், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு...