Ad Widget

20 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படலாமென வெளியான செய்தி குறித்து அதிர்ச்சி தகவல்கள்

எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

வடக்கில் 15 நாள்களில் 225 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு!!

வடக்கில் நேற்று 200 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 225 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்த நிலையில் செப்ரெம்பர் மாதத்தின்...
Ad Widget

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழப்பு; கொலை என உறவினர்கள் தெரிவிப்பு!!!

காங்கேசன்துறை பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத்தலைவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது தலையில் காயம் காணப்படுவதாகப் பொலிஸார் கூறினர். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளைக் கைது செய்யுமாறும் உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். அதனால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது....

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான புதிய தகவல் வெளியானது!

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் அதிகாரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பாடசாலைகளை திறப்பது குறித்த கொள்கை ரீதியான முடிவை எடுப்பது கல்வி அமைச்சுக்கு உரித்தான...

யாழ். போதனாவில் குழந்தை பிரசவித்த தாய் கொரோனோவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த நிலையில் பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “கடந்த 8ஆம் திகதி குறித்த கர்ப்பிணிப்...

வரணியில் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு!

வரணி, குடமியன் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், கப்டன் பவான் (ஐயா) – 99 எனும் வாகன தகர்ப்பு வெடிகுண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...

கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் அரசியல் கைதிகளை பார்வையிட்டனர்!!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ,சட்ட ஆலோசகர் காண்டீபன் ஆகியோர் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அமைச்சின் செயலாளருடன் தொலை பேசியில் தொடர்பை மேற்கொண்ட...