. September 15, 2021 – Jaffna Journal

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன், சாணக்கியன்!!!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கடந்த 2 ஆம் திகதி மரணமடைந்ததை தொடர்ந்து யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள அவரது... Read more »

பயிலுனர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!!

பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகள் தமக்கு வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் அதனை உரிய பகுதியினரின் கவனத்திற்கு கொண்டு வருமாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 53,000 பட்டதாரிகள்... Read more »

தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் ஆரம்ப நாளில் அஞ்சலி

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒறுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது. 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு... Read more »

துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தல் : அநுராதபுரம் சிறையில் அமைச்சர் அட்டகாசம்

அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து இராஜாங்க அமைச்சர் அவர்களில் இருவரை தனக்கு முன்பாக மண்டியிடச் செய்தார் என்றும் அவர்களை... Read more »

அச்சுவேலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

அச்சுவேலியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பம், பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளது. அச்சுவேலி மேற்கு, ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசித்து வரும் இளம் தம்பதியினரின் வீட்டினுள் நேற்று... Read more »

இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்தது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த... Read more »

எமது மக்களை கவலைப்படுத்துகின்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – அங்கஜன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டதாக கூறப்படும் செயல் உண்மையெனில் அது கண்டிக்கப்படவேண்டியதென யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு... Read more »