Ad Widget

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 7,8,9ஆம் திகதிகளில்; நிலமை சீராகாவிடின் நிகழ்நிலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாட்டில் இப்போதுள்ள கோரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை நிகழ்நிலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள்...

இணையவழிக் கற்கைகளின் போது பிள்ளைகள் மீது அதிக அக்கறை பெற்றோருக்குத் தேவை!!

இணையவழிக் கல்வி முறை மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது நடக்கும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முடித விதானபத்திரண தெரிவித்துள்ளதாவது; இணையவழிக் கற்பித்தலில் சிறுவர்கள் துர்நடத்தைக்கு உள்படுத்தப்படுவதாக பல தகவல்கள்...
Ad Widget

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழில் சிறப்பு யாகம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாக பூஜையொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இலங்கையிலுள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், இன்று விசேட யாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள்,...

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கவில்லை

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை குறிப்பிட்டுள்ளார். பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 53 ஆயிரம்...

நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்க திட்டம் – சுதர்ஷினி

நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்...

பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம்!! – அங்கஜன்: வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்தவும் -மணிவண்ணன்

பிள்ளையார் ஆலய குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம், பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி...

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வவுனியா, மாத்தறை கண்டி மற்றும் குருநாகல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அலுவலகங்கள் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக...