Ad Widget

யாழில் தேங்கும் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!! மாநகர முதல்வரின் வேண்டுகோள்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டனம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டமுறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம்...

“இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள்” – விக்னேஸ்வரன்

“தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள்” இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்...
Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!!

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்த 3பேர் பல்கலைக்கழகத்தின் நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட கொரோனா...

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்றார் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு, வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொறுப்பேற்றார். கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்தில், மேற்படிப்புக்காக பிரிட்டனுக்கு சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். எனினும், தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய வைத்தியர் தங்கமுத்து...

கொக்குவில் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக இரகசிய தகவல், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தகவலுக்கமைய இன்று அதிகாலை 4 மணி முதல்...

நியூசிலாந்தில் தாக்குதலை நடத்திய இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த குறித்த நபர் ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். அதன்படி குறித்த ஊரடங்கு செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் இயலுமை உள்ளது -ஜனாதிபதி

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கொரோன ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 20 முதல் 29...