Ad Widget

குருநகர் இளைஞன் கொலை – நீதவான் வழங்கி உத்தரவு

யாழ் குருநகர் பகுதி இளைஞனை வாளால் வெட்டி கொலை செய்த பிரதான சந்தேகநபர்களை 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவும் தொடர்புபட்ட ஏனையோரையும் உடனடியாக கைது செய்யும் படியும் யாழ் நீதவான் பீற்றர்போல் இன்று (01) யாழ் நீதிமன்றத்தில் உத்தரவிட்டார். யாழில் கடந்த 22 ஆம் திகதி பட்டப்பகலில் ஊடரங்கு அமுலில் இருந்த...

யாழில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்த அரச அலுவலகருக்கு எதிராக நீதிமன்றில் தீர்ப்பு!!

பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு ஒத்துழைக்கவேண்டும், அவரினால் கோரப்படும் விவரங்கள் வழங்கப்படவேண்டும் என்று யாழ்ப்பாணம்...
Ad Widget

யாழில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

யாழ். மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள்...

யாழ். நகரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படகின்றது. குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமைபோல நடமாடி வருவதை...

கொரோனா ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தான நோய்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சி நோயுடன் (Multi system inflammatory syndrome) தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே...

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்படலாம்!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அவ்வாறு வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உலகில் வேறு எந்தப் பொறிமுறையும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த விடயம் குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அவர், சோதனைக்காக...

முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை...

அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை!!

அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (வியாழக்கிழமை) முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் வலுவான திருத்தங்களை மேற்கொண்டு, நிர்ணய விலையை விடவும் அதிகவிலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...