Ad Widget

கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உண்ண வேண்டிய உணவுகள்!

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து...

குருநகர் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிரிழந்தவருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் மாநகர் குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த...
Ad Widget

ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இணையவழியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ் கட்சிகள் இணைந்து ஜெனிவாவிற்கு கடிதமொன்றை அனுப்புவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேநேரம், முதற்கட்டமாக ஒருமித்த...

யாழ்ப்பாணத்தில் இருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு...

ஓர் நேர்மையான தேசிய வாதியை இந்த நாடு இழந்துள்ளது – மங்களவின் மறைவு குறித்து ஸ்ரீகாந்தா

ஓர் நேர்மையான தேசிய வாதியை மங்கள சமரவீரவின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார். அவரின் மறைவு குறித்து ந.ஸ்ரீகாந்தா...