Ad Widget

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!!

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தது 3 வாரங்களாவது நாட்டை முடக்கவேண்டும்!! அரச பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசின் பங்காளிக் கட்சிகள் 10 இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளன. குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டைப் முடக்காமல் கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மருத்துவமனைகளினால் தாங்கமுடியும் அளவிற்கு குறைக்க முடியாது என்று அவர்கள் நம்புவதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் 10 கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நமது...
Ad Widget

யாழில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில், இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்...

அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது. இதவேளை, வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஐத்...

பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின!!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிட்டுள்ளது. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக நேற்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய சுகாதார வழிகாட்டுதல்களின் படி ஷொப்பிங் மால்கள் இன்று...

வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாம்- விசேட வைத்திய நிபுணர்

வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாமென வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி மக்களை வலியுறுத்தியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றவர்களுக்கே தற்போது...