Ad Widget

சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் நாட்டை முடக்க அரசு தயார்

சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் எந்த நேரத்திலும் நாட்டை முடக்கும் முடிவை எடுக்க தயங்கமாட்டோம் என்று அரசு தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். நாட்டை மூடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இல்லை என்று அவர் கூறினார். கோவிட்-19...

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம்!

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் போதுமானளவு ஒட்சிசனை களஞ்சியப்படுத்து, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு நாட்டினை முழுமையாக முடக்கு,...
Ad Widget

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனா!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனும் சுயதனிமைப்படுத்தலில்...

வெள்ளிக்கிழமை நாடு முடக்கப்படாவிட்டால், அது திங்களன்று கட்டாய முடக்கத்துக்கு வழிவகுக்கும்!!

14 நாள்களுக்கு நாடு முழுவதையும் தனிமைப்படுத்துமாறு அரசிடம் வலியுறுத்தி இன்று நாட்டின் பல மருத்துவமனைகளுக்கு முன்னால் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமாக முடக்கப்பட்டால், நாட்டின் சுகாதாரத் துறைக்கான 100 சதவீத பொறுப்பை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். எவ்வாறாயினும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாடு முடக்கப்படாவிட்டால்,...

நாட்டை முடக்க முடியாது!! ஜனாதிபதி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்....

நாட்டை முடக்குவதற்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசு நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு – சுகாதார அமைச்சர்

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்தபோதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். மாதாந்த சம்பளம் பெறுபவர்களுக்கு மேலதிகமாக, நாட்டில் தினசரி வருமானம்...

வர்த்தக நிலையங்களில் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் -யாழ் வணிகர்கழக தலைவர்

யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய கோவிட் -19 நிலமைகளை எவ்வாறு கையாளுவது தெடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் அவர் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தகர்களுக்கான அறிவித்தலாக தற்போது நாட்டில் கோவிட் -19 மிக...

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறமிருக்க யாழில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடக்கிறது – கஜேந்திரன்

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ( 17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில், மக்கள் செத்து...

நல்லூர் திருவிழா- பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து, யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், யாழ்ப்பாண பொலிஸாருடன் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டார். அதாவது விசேட திருவிழாக்கள் மற்றும் பூஜை நேரங்களை தவிர மீதி நேரங்களில்...

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அதற்கான வேலைத்திட்டமாகவே வவுனியா நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா மாவட்டத்தில் 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு பிரிவுகளின் கார்தாசின் குளம், மகரம்ப...

கொரோனாவால் நாட்டில் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 3 ஆயிரத்து 609 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. 102 ஆண்களும் 69 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக...