Ad Widget

லப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 363 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் கொழும்பு விலை ஆயிரத்து 856 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 743 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கு அதன் விலை வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிரூட்டப்பட்ட அறைகள், உள்புற அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் 2 முகக்கவசங்களை அணியவேண்டும்!!!

குளிரூட்டப்பட்ட அறைகளில் கடமையாற்றும் அலுவலகர் மற்றும் உத்தியோகத்தர்கள் முடிந்தவரை இரண்டு முகக்கவசங்களை அணியவும், இரண்டு மீற்றர் சமூக இடைவெளியை பராமரிக்கவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான மருத்துவ வல்லுநர் நதீகா ஜானகே இதனைத் தெரிவித்தார். கோவிட் – 19 டெல்டா...
Ad Widget

நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 5 பேர் கொரோனாவுக்கு பலி!

நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் கொவிட் தொற்றுக்குள்ளான 5 பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது பதிவாகும் தொற்றாளர்களை விட பல மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், இதுவரை...

விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று!

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. “நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீடு நோக்கி நடந்து சென்ற அவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது. விபத்தில் படுகாயமடைந்த வயோதிப் பெண் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றிரவே...

கொரோனா வைரஸினால் மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 75 ஆண்களும் 49 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா – தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியானது. அதனையடுத்தே அவருடன் பழகியவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்....

யாழில் பேருந்து குடைசாய்வு – பலர் காயம்!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைதுள்ளனர். காரைநகர் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கல்லுண்டாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய...