Ad Widget

PCR மற்றும் ANTIGEN பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்!!

தனியார் மருத்து நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் மாத்திரமே அறவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸின் ‘எப்சிலான்’ திரிபு பாகிஸ்தானில் அடையாளம் – தடுப்பூசிகளிடமும் திறனில்லை

பாகிஸ்தானில் இருந்து “எப்சிலான்” என்ற உயர் பரிமாற்ற கோவிட்-19 திரிபு பதிவாகியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சுகாதார அதிகாரிகள், கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களிடையே ‘எப்சிலான்’ வைரஸ் அடையாளம் காணப்பட்டதை வெளிப்படுத்தினர். முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த கோவிட்-19 திரிபுகளை தடுப்பூசிகள் அடக்கும் திறன் கொண்டவை என்று இதுவரை நிபுணர்கள் காட்டியுள்ளனர். ஆனால் தடுப்பூசிகளால் இந்த...
Ad Widget

பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கி கிளை மூடல்!!

தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்ட நிலையில் அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் வங்கியின் பருத்தித்துறை கிளை மாற்று நடவடிக்கை வரை மூடுமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி...

கோவிட்-19 நோயாளிகளை வீட்டில் பராமரிப்பது பற்றி மருத்துவ வல்லுநரின் விளக்கம்!

கோவிட்-19 நோயாளிகளில் ஆபத்துக் குறைந்தவர்களை வீட்டிலேயே வைத்து பராமரிப்பதற்கான 14 நாள்கள் திட்டம் மருத்துவர்களினால் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தகவலை இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர், மருத்துவ வல்லுநர் மல்காந்தி ஹல்கென தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது; வீடுகளில் கோவிட்-19 நோயாளிகளை கண்காணிக்க மருத்துவ குழுக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன. ஒரு நோயாளி...

வல்வை நகர சபைத் தலைவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது-76) கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடநிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர்...

யாழில் இளம் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி !

யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே நேற்று முன்திகம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். “இவ்வாறு இறந்த கர்ப்பிணிப் பெண் திருமணம் முடித்து ஒரு ஆண்டு என்றும் அவர் சம்பவதினம் திடீரென வாந்தியெடுத்து மயக்கமடைந்து நிலத்தில் சரிந்துள்ளார்....

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு செல்ல கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்!!

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு நல்லூர்...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 340ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த...

உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ்...