Ad Widget

தடைகளைத் தாண்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் பேரணி!!!

24 வருட அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ். நகரில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து யாழ். நகர வீதி வழியாக...

செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை

திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என கடந்த வாரம் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார். அத்தோடு பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த நிலையில் கல்வி...
Ad Widget

யாழ்.கீரிமலைக்கு சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு!!

ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றிருந்தனர். கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் அன்டிஜன் பரிசோதனையை சுகாதார பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்!!

வவுனியா- மதவுவைத்தகுளம் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காண முடியாத வகையில், உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமாக, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள...

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!!

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல்போன இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, பண்ணை பாலத்தடியில் நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளையிலேயே தவறி விழுந்து காணாமல்போயுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் சுமார்...

“ஒருவேளை நாடு சில நாட்களுக்கு மூடப்படும்” – ஆளும் கட்சி எம்.பி.

கோவிட் -19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் சில நாள்களுக்கு நாடு மூடப்பட வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்தார். நாட்டில் கடினமான பொருளாதார நிலமை இருந்தபோதிலும், மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க கடினமாக இருந்தாலும் கூட அத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் ஊடகங்களிடம்...

உடன் பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பியுங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர்

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரித்துள்ளனர். அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுள்ள கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியுமான என்பது கேள்விக்குறியாகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலைமைகள் மற்றும் கொவிட்...

டெல்லி செல்லத் தயாராகும் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த்...

நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால், 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும்!!

கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல் துறை பரிந்துரைத்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிந்துரை, சோதனைகளை மேற்கோள் காட்டி அத்துறையின் பணிப்பாளர், வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள...

செல்வச்சந்நிதி ஆலய வளாகத்திலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா!!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை இனங்கண்டு, அவர்களையும் சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர். தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை திருவிழாவுக்கு முன்னர் பி.சி.ஆர்.பரிசோதனை எடுக்கவேண்டும் என பொதுச்...

கொரோனாவால் மேலும் 94 மரணங்கள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 69 ஆண்களும் 25 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111ஆக...