Ad Widget

வைத்தியசாலைகள், பொது இடங்களுக்கு செல்வோருக்கு தடுப்பூசி பெற்றிருப்பது இனிமேல் அவசியப்படலாம்!!!

இனிமேல் வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்படலாம். எனவே வடக்கு மாகாணத்தில் இதுவரை கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குறித்த எச்சங்களை பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி பொலிஸார்...
Ad Widget

பூஞ்சை தோல் நோய் பரவும் அபாயம்; மருத்துவ ஆலோசனையைப் பெற பரிந்துரை

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினருக்கு தோல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையில் உள்ள தோல் மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு தோல் மருத்துவ வல்லுநர் நிறுவனம் பரிந்துரைக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயின் போது டைனியா எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாக பரவுவது குறித்து அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (04)...

11 இளைஞர்கள் கடத்தல் ; சட்டமா அதிபர் திணைக்களம் முடிவை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய -பசிபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா சட்டமா அதிபர் திணைக்களத்தின் இந்த...

வடக்கில் விவசாயப் பண்ணைகள் படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்....

கொரோனாவால் சீனாவைவைவிட இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவு – மேலும் 82 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 727ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்று தோன்றிய இடமாகக் கூறப்படும்...

நல்லூர் கந்தனின் திருவிழாவை 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின்படி...

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு – மக்கள் அவதி!

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்தமையை அடுத்து இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம்...