Ad Widget

பாடாசாலைகளை மீள திறக்கும் திகதி அறிவிப்பு!!

நட்டிலுள்ள பாடசாலைகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை...

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களை நம்புவதில்லை -சி.வி.விக்னேஸ்வரன்

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம் எனக் கூறினார். ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும்...
Ad Widget

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்று (புதன்னிழமை) மதியம் இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். இலவச...

தேவை ஏற்பட்டால் முடக்கம் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

நாட்டில் தேவை ஏற்பட்டால் மட்டுமே முடக்கம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவைகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கையின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 இரண்டாவது தடுப்பூசி வழங்கும் பணி ஓக.9,10,11ஆம் திகதிகளில்!!

கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த ஜூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09 ஆம், 10 ஆம், 11 ஆம் திகதிகளில் வழங்கப்படும். இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர்...

ஆபத்தான கட்டத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது எரியும் நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பது போன்றது – மருத்துவ வல்லுநர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!!

கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவி வரும் நேரத்தில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா திரிபு காரணமாக தினசரி கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசின் முடிவு நெருப்புக்கு எரிபொருளைச் ஊற்றுவது போன்றது என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் வல்வெட்டித்துனையைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்வடைந்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது!

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையயில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை – மேலும் 74 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 26 பெண்களும் 48 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து...