Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒட்சிசன் சிலிண்டர்கள் இதுவரை...

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் மட்டக்களப்பில் இருந்து 1,300 கி.மீ தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் நாட்டின் கரையோரத்தில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Ad Widget

வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 62 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியில் முதல் டோஸைப் பெற்றனர்!!

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் என கணக்கிடப்பட்டுள்ளத்து. அவர்களில் இன்றுவரை...

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபு ஆபத்தானது!!

நாட்டில் பரவி வரும் கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு மிகவும் கடுமையானது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த டெல்டா திரிபு 15 வினாடிகளுக்குள் பலருக்கு பரவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். முன்னதாக நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவிய கோரோனா வைரஸ் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் மற்றவர்களுக்கு பரவியதாக சுகாதார...

யாழில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த (83 வயது) ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் மேலும் 63 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 420 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 27 பெண்களும் 36 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து...