Ad Widget

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

அரச ஊழியர்களை வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அரசின் தீர்மானம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தின் போது அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் விட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரச ஊழியர்கள் கொவிட் தடுப்பூசியின் முதல்...

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இன்று முதல்!!

கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது. அனைத்து அரசு துறை ஊழியர்களையும் இன்று முதல் வேலைக்கு அழைக்கும் அரசின் முடிவை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது. ஏற்கனவே இருந்த நேர அட்டவணையின்படி, போக்குவரத்து சேவைகள் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக...
Ad Widget

இலங்கை மிக மோசமான டெல்டா அலையின் விளிம்பில்! – 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என எச்சரிக்கும் பேராசிரியர்

இலங்கை மிகவும் மோசமான டெல்டா அலையின் விளிம்பில் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பில் ஆராயும் விசேட நிபுணர், பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளார். இணையம் ஊடாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய டெல்டா திரிபு தெற்காசிய பிராந்தியம் உட்பட உலகளவில் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் மலித் பீரிஸ்...

அரச ஊழியர்கள் அனைவரையும் இன்று முதல் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்கள் அனைவரையும் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அவர்கள் அனைவரும் இன்றுமுதல் கடைமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரச பணியாளர்களை...

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சண்டிலிப்பாய்,மாசியப்பிட்டியைச் சேர்ந்த (67 வயது) பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.