Ad Widget

தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர் கோவிட்-19 நோயினால் சாவு

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது -44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி...

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு மாத்திரமே பேருந்தில் செல்ல அனுமதி?

தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதற்குப் பின்னர், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம்...
Ad Widget

வடக்கில் 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா – 164 உயிரிழப்புகள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 800 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றினால் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் கொரோனாத் தொற்று நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவித்த...

காணி சுவீகரிப்பு: கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற...

பெண்கள் குழுவின் தாக்குதல் – 20 வயது யாழ். இளைஞன் தற்கொலை

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இளைஞனின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. நாவாந்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள்...

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் செய்ய வேண்டியது இது தான்!

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ்...

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது – மேலும் 63 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 2 இலட்சத்து 71...