Ad Widget

யாழ். உள்ளிட்ட நாட்டின் பல இடங்களுக்கும் பரவிய டெல்டா!

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பிலியந்தலையைச் 22 வயதான ஆணொருவரும் இவர்களில்...

வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தல்

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. அதனையடுத்து பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிபாளருக்கும் நேற்றிரவு முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைய உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு (J388)...
Ad Widget

பருத்தித்துறை பொதுச் சந்தை வியாபாரிகள் மூவர் உள்பட ஐவருக்கு கோரோனா தொற்று

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய சந்தை மேற்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமானோரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அதனால் பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது...

யாழ்ப்பாணத்தில் 42 வயதுடைய ஆண் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.

வல்வை ஆதிகோவிலடியில் 38 பேருக்கு கோரோனா தொற்று; இரண்டு நாள்களில் 48 பேர் கண்டறிவு

வல்வெட்டித்துறையில் நேற்று 38 பேர் உள்பட இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று...

தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தரவுகளில் சிக்கல் – இராணுவத் தளபதி

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்...

கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை!!

இலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸின் மற்றொரு அலை உருவாக வாய்ப்புள்ளது என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். இலங்கை விழிப்புடன் இருப்பதாகவும் உலக முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். வைரஸை ஒழிக்க முடியாது என்பதை...

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு!!

நாட்டில் பாரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றப் பின்னர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்காகவும் நாட்டை திறக்க...

மன்னாரில் 3 கத்தோலிக்க சொரூபங்கள் மீது தாக்குதல்!

மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது நேற்று (புதன்கிழமை) அதிகாலை அடையாளந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....