Ad Widget

கொழும்பு பயணித்த பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக பேருந்து திருப்பி அனுப்பப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும் 19ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள்...

சீன நிறுவனத்தின் அட்டை பண்ணை தொழிலாளர்களுடன் கலந்துபேசியே பரீட்சார்த்தமாக நடத்தப்படுகின்றது – அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி கௌதாரி முனையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை அப்பகுதி கடற்தொழிலாளர்களுடன் கலந்துபேசி பரீட்சார்த்தமாக நடத்தப்படுவாதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று(செவ்வாய்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,...
Ad Widget

வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவேன் – மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே கடமையாற்றியுள்ளதால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார,...

தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் அடுத்த வாரம் முடிவு!!

ஒக்டோபர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பது குறித்த முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; ஒன்பது மாகாணங்களின்...

இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் விதமான கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள்

கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பில் யாழில் கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில், கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகளை இந்த கட்சி ஒட்டி வருகின்றன. கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பிலுள்ள...

சீனாவின் கடலட்டைப் பண்ணை- அரசாங்கத்துக்கு சிவாஜிலிங்கம் முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி பூநகரிப் பகுதியிலுள்ள சீனாவின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...