Ad Widget

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை!!

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ்.நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை...

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும்...
Ad Widget

கொழும்பு, கண்டி, யாழ் மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பகுதிகள் இன்று காலை 6.00 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அம்பறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை...

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள்? – மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் விளக்கம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்த விடயம் பத்திரிக்கையொன்றில் தலைப்பு...

குறிகாட்டுவான் கடற்கரையில் இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்குகின்றன

குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன. இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நயினாதீவு கடற்கரை பகுதிகளிலும் பெருமளவான மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்தது!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. 18 பெண்களும் 17 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது.