Ad Widget

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள்!!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் வெளிமாட்ட மீனவர்கள் ஈடுப்படுவதாக வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்படாத சுருக்கு வலைகள் மற்றும் வெளிச்சம் பாச்சி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பவதனால் தங்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சிறியளவில் முதலீடுகளை மேற்கொண்டு கடற்றொழிலையே தமது முழுமையான வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள் இதனால் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும்...

கோண்டாவிலில் கடன் காசு கேட்டுச் சென்றவர் மீது தாக்குதல்!!

கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில்...
Ad Widget

யாழில் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள்- தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடிகாமம் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. கொடிகாமம்- கெற்பேலி பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று, வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் வீட்டின் மீதும் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்...

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நாடளாவிய ரீதியில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி யாழில் இருந்து கொழும்புக்கு சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக பெரும்பாலானோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு- கொழும்புக்கு...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு எப்போது?

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அவர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை திறப்பதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விசேடமாக பாடசாலைகளை...

பருத்தித்துறை நகரில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மந்திகை பகுதியில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு...

கோண்டாவில் வன்முறைக்கு காரணம் ஆவா; ஜி குழுவை இலக்கு வைத்துத் தாக்குதல்

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 சந்தேக நபர்கள்...

உ/த. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்படி விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் பீ....

அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது – வைத்தியர் ரவி ரன்னன் எலிய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர்...

14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்!

பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதேவேளை ஜூலை 5 முதல் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல் இருக்கும்...

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ளன. இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு...