Ad Widget

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டார் கஜேந்திரன்!

கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர். இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை...
Ad Widget

யாழில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி!!

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த போது, 160 கோடி ரூபா...

ஆபத்து நீங்கவில்லை!! ஒரு புதிய எதிரி சுற்றித்திரிகிறான் – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளை இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "60 வயதிற்கு...

கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி!!

கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுபகுள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்த பெறுமதியான பொருளிகளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து...

யாழில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 100ஐ நெருங்கியது!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். அதேபோல், யாழ்ப்பாணம் – வெள்ளாந்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம்...