. June 25, 2021 – Jaffna Journal

தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலருக்கு உடல் நலப் பாதிப்பு!!

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை, திடீர் உடல் நலப்... Read more »

நல்லூரில் கலாசார சீரழிவு இடம்பெற்ற விடுதி முற்றுகை!! 6பேர் கைது!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் உள்ளடங்களாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்... Read more »

யாழில் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை!!

வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை... Read more »

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 5 மாவட்டங்களில் 10 கிராமங்கள் முடக்கம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி- கரணவாய் கிராம அலுவலகர் பிரிவும் மன்னாரில் தலைமன்னார் – பியர் கிழக்கு, மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். பதுளை, மன்னார், யாழ்ப்பாணம் களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி தொடக்கம்... Read more »

திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்!

பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சுகாதார... Read more »

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் துமிந்த சில்வாவுக்கும் விடுதலை!!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.... Read more »

ஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையான தமிழ் அரசியல் கைதி கோரிக்கை!

எங்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மக்களுக்கும், எமது விடுதலைக்காக செயற்பட்டவர்களுக்கும், எம் விடுதலையை சாத்தியமாக்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட எம்மை போன்ற உறவுகள் சிலர் இன்னமும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும்... Read more »

மணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்!

யாழில் மண் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரு... Read more »