Ad Widget

யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக...

கோவிட்-19 டெல்டா திரிபு நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து!!

இந்தியா முழுவதும் வேகமாகப் பரவியிருக்கும் கோவிட்-19 டெல்டா வரைஸ் திரிபு வகையை இலங்கையில் கண்டுபிடிப்பது மிகவும் ஆபத்தானது என்று இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, கோவிட்-19 டெல்டா வைரஸ் திரிபு பரவியதாகக் கூறப்படும் கொழும்பில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது...
Ad Widget

யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 பேருக்கு கொரோனா!!

சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 78 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ்...

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில்...

தமிழர்களுக்கு தீர்வை வழங்க இந்தியா- அமெரிக்கா முன்வர வேண்டும்- சிவாஜிலிங்கம்

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச்சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவிடம் ஒன்றையே...

யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள், உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர். குறித்த நிகழ்வினை நாளையும்...