Ad Widget

சமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – கஜேந்திரன்

" ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்." என தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600...

மாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி இணையவழிக் கற்றலில் ஈடுபட உதவும் இ-தக்ஸலவா திட்டத்தை விரைவுபடுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான நமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய இ-தக்ஸலவா அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்துள்ளது. இந்த சம்பவத்தினால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அதாவது நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை, கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியுள்ளது. இதில்...

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, ‘மக்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும்...