Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இட நெருக்கடி!! பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இரண்டு கோவிட்-19 சிகிச்சை விடுதிகள் காணப்படும் நிலையில் மேதிகமாக மூன்றாவது விடுதியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டு விடுதிகள்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொலைபேசியை திருட்டு கொடுத்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 24 ம் திகதி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எனினும் அவற்றில் இரண்டு தொலைபேசிகள் தொடர்பில் மட்டுமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவைகள் உரியவர்களிடம் நீதிமன்றம் மூலம்...
Ad Widget

அரச வைத்தியசாலைகளில் மாதாந்த பரிசோதனைக்கு செல்வோருக்கான அறிவிப்பு!

அரசு மருத்துவமனைகளில் மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக் – Clinic) பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு விநியோக திட்டம் நெற்று (வியாழக்கிழமை) முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் நடத்தப்படும் மாதாந்த பரிசோதனையில் கலந்துகொள்ள முடியாத நோயாளிகளின் வசதிக்காக சுகாதார அமைச்சகம் மற்றும் தபால் துறை இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. அதன்படி, அரச...

யாழில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்....

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் இளையதம்பி உதயகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை...