Ad Widget

வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு...

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வதியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு...
Ad Widget

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி ஞாயிறன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமரின் இணைப்புச் செயலாளர், கீதநாதன் காசிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் கிராம அலுவலக பிரிவு ரீதியில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்....

பயணத்தடையை தளர்த்துவதில் பயனில்லை – ஜனாதிபதி

கடந்த 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில் பொதுமக்கள் செயற்பட்ட விதம் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளித்ததைப் போன்றதாகும். நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் இதன்மூலம் தோல்வி அடைய கூடுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் நீடிப்பதற்கு ஜனாதிபதி...