Ad Widget

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கவேண்டும் – விக்னேஸ்வரன்

வடக்கு – கிழக்கு மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்று ஆபத்திலிருந்து விடுபட இந்திய அரசு தடுப்பூசி மருத்துகளை வழங்கவேண்டும் என்று அந்த நாட்டின் யாழ்ப்பாணம் துணைத் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் இந்திய துணைத் தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்...

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப் படையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடை காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோரை கைது செய்வதற்காக, ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையினை ஏனைய பகுதிகளில்...
Ad Widget

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik-V) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik-V) கொவிட் 19  தடுப்பூசிகள் நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. 50,000 டோஸ் தடுப்பூசிகள் விசேட விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. முதல் தொகுதி ​15,000 டோஸ் கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 13.5 மில்லியன்...

வடக்கில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தடைப்பட்டதற்கான காரணம் வெளியானது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்கி வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொரோனா தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம்...

பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது எனவும் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை தொடரும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார். அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை...

நல்லூர் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் J/103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளது. நல்லூர்...