Ad Widget

25ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை நீக்காமல் தொடர்ச்சியாக 14 நாள்கள் விதிக்கவேண்டும்!!

அடுத்த செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ வல்லுநர் லக்குமார பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார். நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள நிலையில் சிறப்பு மருத்துவ...

மணல் கடத்தல் கும்பலின் ஹன்டர் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் சிக்கினார்!!

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். தப்பித்தவர்களை கைது...
Ad Widget

கொரோனா தொற்றாளர் வீதியில் செல்பவர்களை அழைத்து உரையாடுவதாக மக்கள் விசனம்!

சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லுகின்றவர்களை மறித்து உரையாடுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறு குறித்த நபர், ஏனையவர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் அவ்வீதி வழியாக செல்பவர்கள் அச்சம் கொண்டு, வேறு வீதிகள் ஊடாக பயணிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...

பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிகின்றது!!

பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து...

அந்தமான் கடல் பிராந்தியத்தில் சூறாவளி!

அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் நேற்று (20) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இந்தக் கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் அல்லது கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை...

பலாலி வடக்கு கிராம அலுவலகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி வடக்கு உள்பட்ட மூன்று மாவட்டங்களில் 7 கிராம அலுவலகர் பிரிவுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலி. வடக்கு பலாலி வடக்கு கிராம அலுவலகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுகிறது. அந்தக் கிராமத்தில் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு...

வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கோரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை (மே 20) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 272 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு...

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரு வாரங்களேனும் நாட்டை முடக்க நேரிடும் – மக்களை பொறுப்புடன் செயற்படுமாறு வலியுறுத்தும் அரசாங்கம்

புதிய வைரஸ் காரணமாக பாதிப்புக்கள் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் நாட்டு மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை விசேட வைத்திய நிபுணர் என்ற வகையில் தெரிவிக்க விரும்புகின்றேன். அவ்வாறு செய்தால் வைரஸ் பரவலை எம்மால்...

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 பேரும் எதிராக 59 பேரும் வாக்களித்திருந்தனர். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் நடைபெற்றிருந்த நிலையில்,...

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக தமிழர்!

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, மே 10இல் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்ற ஜெனரல் தப்புல டி லிவேராவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில்,...

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலாகும் முழுநேர பயணத்தடை!

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....