Ad Widget

உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா?

நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ´நேற்று மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கும் அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும். 3,500 ஐ போல்...

கொரோனா தொற்றால் இணுவிலில் குருக்கள் மரணம்!!

இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு...
Ad Widget

2021.05.19 கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தை நிறுவும் சட்டமூலத்தை இன்று இந்த சபையில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்புதிய கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானம் கடந்த 2014 செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி, நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதொன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கட்டுமானத்திற்கு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி சீ ஜின் பிங்...

தலைமறைவாகியுள்ள புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலை ஊழியர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என அறியமுடிகிறது. இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,முள்ளியவளை காவல்துறை பிரிவுகள் கடந்த 17.05.21 ஆம் திகதி இரவு 11.00...

கொரோனாவில் இருந்து மீட்சி பெற வைத்தியர் கூறும் அறிவுரை

தற்போது வைரஸ் தொற்றானது யாழ். மாவட்டத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போல் வட மாகாணத்திலும் கொவிட் தாக்கம் அதிகரித்து உள்ளது. தற்போது பரவும் வைரஸ் தாக்கத்தினால் 20 தொடக்கம் 60 வயது வரையானோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டவர்களில் 10% ஆனோர் சுவாசிப்பதற்குச் சிரமப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுக்கு...

நாடளாவிய ரீதியில் அமுலாகும் முழுநேர பயணத்தடை – மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் சுன்னாகத்தில் மீட்பு!!

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவத்தனர். சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர்களின் கோரிக்கையை அரசாங்கம் புறந்தள்ளிவிட்டு சீனாவுக்கு நாட்டையே கொடுக்கின்றது!!

தமிழர்கள் கேட்பது அனைத்தும் இந்த அரசாங்கத்தினால் மறுக்கப்படுகின்றது,ஆனால் சீனா கேட்கும் சகலதும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது. அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச்...

புதிய மாணவர்களுக்கான பல்கலைகழ அனுமதி விண்ணப்பம் – முக்கிய அறிவிப்பு

2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார். இங்கு...

நாட்டு மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

நாட்டில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் நேற்று (புதன்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேருக்கும் கிளிநொச்சியில் 23...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! – மேலும் 36 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 36 மரணங்கள் பாதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 19 ஆண்களும் 17 பெண்களுமே இவ்வாறு மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் எம்பிலிபிட்டி, நாவலப்பிட்டி, புசல்லாவ, வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊராபொல, கட்டுவ, செவனகல,...