Ad Widget

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்க வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று உயிர்நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான நேற்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றபோது அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் பங்கேற்புடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும்...
Ad Widget

யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு காண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தடைகள் கண்காணிப்புக்களை மீறி பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் சுடரேற்றி...

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேருக்கும் கிளிநொச்சியில் 31...

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...