Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் – சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் பொலிஸாருடனான கடும் வாக்குவாதத்தின் பின்னர் எச்சரிக்கையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர், கோப்பாய் பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு, இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக...
Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நினைவுகூரப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் குறித்த பதிவில், “முள்ளிவாய்க்கால் 12ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்று...

யாழ்.பல்கலையில் மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றிவிட்ட காவலாளி!!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றியுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த...

பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக ஒருவர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 38 வயது ஒருவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும்...

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதேவேளை யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று பிற்பகலில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும்...

தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் பகுதியில் வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல்...

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு நந்திக் கடலோரத்தில் குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

நீதி கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம்- நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து உரை நிகழ்த்திய முதல்வர், “உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும்...

இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முக்கிய அறிவிப்பு!

மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு...

24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். இருப்பினும் இந்த இரண்டு நாட்கள் தனியார் துறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 21ஆம் திகதி முதல் நாடளாவிய...

யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது – பிரதமரிடம் சுமந்திரன் தெரிவிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இறந்ததை நினைவுப் படுத்தியிருந்தார். இந்த நிலையில், பிரதமரின் உரையை அடுத்து அதற்கு பதில் வழங்கும்படியாக கருத்து வெளியிடும்போதே எம்.ஏ.சுமந்திரன்...

பருத்தித்துறை மீன் சந்தைக்கு சீல்!!

பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் மூடப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மற்றுமொரு பயணக் கட்டுப்பாடு அமுல் – அதிரடி அறிவிப்பு

21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை...

கொரோனா உச்சம்: முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும். யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...

நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிப் போரில்...

வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வுவுனியாவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் ஆலயத்தின் பிரதம குருவான பிரபாகரக்...