Ad Widget

அவசரகால நிலை ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு தயார் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு இருதய சத்திரசிகிச்சை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த விசேட இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.மித்திரகுமார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவர்களும் இணைந்து சந்திரசிகிச்சையை மேற்கொண்டனர். அவருக்கு அஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சையின் பின் தான் நலமாக இருப்பதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இந்த அறுவைச்...
Ad Widget

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி, யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற நினைவு நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி...

கரவெட்டி பிரதேசசபையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணினால் பரபரப்பு!

கரவெட்டி பிரதேசசபையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக பெண்ணொருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லியடியில் தமது பழக்கடையை கரவெட்டி தவிசாளர் அகற்றியதாக குறிப்பிட்ட அந்த பெண், அதை மீள அமைக்க அனுமதிக்கப்படா விட்டால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார். நெல்லியடி சந்தைக்கு அண்மையாக கடையொன்றை வாடகைக்கு பெற்றுள்ள முஸ்லிம் குடும்பமொன்று, அதில் பழைய இரும்பு பொருட்களை...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத்தளபதி

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 660 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 12 பேருக்கு...

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சமகால...

நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறினார். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போது...

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 95 ஆயிரத்து 83 பேர்...

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொலிஸார், சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 12 இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் உடகப் பேச்சாளர்...