Ad Widget

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல்...

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை தவிர வேறு எந்ததொரு மாற்று வழியும் இல்லையென அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். குறித்த செயற்பாட்டினை விரைவாக முன்னெடுக்காவிடின் எதிர்வரும் காலத்தில் நாடு பெரும் ஆபத்தில்...
Ad Widget

பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தங்களது குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோருக்கு குடும்ப சுகாதார பணியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி...

சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நேற்றைய அறிக்கையின்படி கொரோனா பரவல் வடக்கில் கட்டுப்பாட்டிற்குள்...

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள்...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ, வத்தள மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், 62, 45, 53, 56, 76, 48 மற்றும் 57 வயதுடைய ஆண்களும்...