Ad Widget

திருநெல்வேலி-பாரதிபுரம் பகுதி விடுவிக்கப்படுகிறது- யாழ். மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் சுகாதார...

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்...
Ad Widget

அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என எச்சரித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதை சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது மக்கள் முகமூடி அணிவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வார இறுதி நாட்களில்...

பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைப்பு!!

பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பிரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைகழகங்கள் மீள ஆரம்பிப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் பல்கலைகழக ஆரம்பம் மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். நகரப்பகுதியில் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு!

இராணுவத்தினரால் யாழ். நகரப்பகுதி சுத்தமாக்கி கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு. யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய யாழ்ப்பாண நகரின் பஸார் வீதிப் பகுதி ராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று (வியாழக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் 51-வது படையணி...

கொவிட் பரவல் – பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று; 11 பேர் யாழ்ப்பாணம் பொலிஸார்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உள்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 21...

கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் நேற்று மாலை 6.30 மணியளவில் சுற்று காவல் பணியில் (ரோந்து) ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறித்தகாகவும் ,அதன் போது, இராணுவத்தினரின் கட்டளையை மீறி அவர்கள்...

அமெரிக்க மிஷன் உரிமை கோரிய ஆதனம் யூனியன் கல்லூரிக்கே சொந்தம்!!

அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு...

வடக்கில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் – ஆ. கேதீஸ்வரன்

எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும், மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில்...

யாழில்.நாட்டு துப்பாக்கி உட்பட வெடிமருந்துகளுடன் மூவர் கைது!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள்...