Ad Widget

தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 30ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. க.பொ....

வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தா

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை, அவை புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதைப் பாரபட்சமின்றி சிந்திக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர், சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி...
Ad Widget

மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும், சட்டத் தரணியுமான மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு...

யாழ். முதல்வர் மணிவண்ணனை சந்திக்கச் சென்ற சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு

விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட முதல்வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சுமார் 6...

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் தாக்குதல்!!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் அதிபர் விடுதி மற்றும் அது அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகின்றனர். மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில்...

யாழ்.மாநகரில் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தகர்களை கடை திறக்க அனுமதி மறுப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் 300 பேர் வரை இரண்டாவது பிசிஆர் பரிசோதனையை நடத்தாததால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுக்கான பிசிஆர் மாதிரிகளை இன்று பெறுவதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி முன்னெடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சந்தை, கடைத்...

பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

பண்டிகை காலங்களில் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மூன்றாவது அலை தாக்காம் தோற்றம் பெறாத வகையில் அவதானத்துடன் செயற்படுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்....

யாழில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை எட்டாகப் பதிவாகியுள்ளது.

வடக்கில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 352 பேரின் மாதிரிகள் நேற்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா வைத்தியசாலையில்...

யாழ்.மாநகர சபை அறிமுகப்படுத்திய சீருடை விவகாரம்: யாழ்.மாநகர சபை முதல்வர் கைது

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு 8 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம்...