. April 2021 – Jaffna Journal

நாடுமுழுவதும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை!!

தற்போது நாடுமுழுவதும் பரவி வரும் கோவிட்- 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவிட்-19 நோயாளிகளின் தீவிர சிகிச்சைக்காக ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு... Read more »

அதிவேக நெடுஞ்சாலையில் சுமந்திரனின் வாகனம் விபத்து!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில், கல்முனை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பங்கேற்பதற்காக சென்ற போது, வாகனம் விபத்தில் சிக்கியது. இன்று காலை கட்டுநாயக்கவிற்கு அண்மையில், அதிக வேக நெடுஞ்சாலையிலேயே வாகனம் விபத்துக்குள்ளாகியது. வாகனம்... Read more »

நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல், இரண்டு வாரங்களுக்கு குறித்த நிகழ்வுகளை... Read more »

தமிழர் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனம்- சிறிதரன்

தமிழர்களின் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறுதான், இராவணனையும் இராவணவலவேகய எனும் சிங்கள அரசனாகக் காண்பிக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்... Read more »

மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடலுக்குத் தடை!

நாட்டில் கொரோனா தொற்று அச்சநிலையைத் தொடர்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவிப்பு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வழிபாட்டு தலங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடியது 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... Read more »

யாழ்ப்பாணத்தில் 14 பேருக்கு கோரோனா தொற்று; நால்வர் கொடிகாமம் வியாபாரிகள்

யாழ்ப்பாணத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 19 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 760... Read more »

நாட்டில் மேலும் 1,531 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். நாட்டில் 2020 ஜனவரி மாதம் முதல்... Read more »

அவசரகால நிலை ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு தயார் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு இருதய சத்திரசிகிச்சை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த விசேட இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.மித்திரகுமார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவர்களும் இணைந்து சந்திரசிகிச்சையை மேற்கொண்டனர். அவருக்கு அஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சையின்... Read more »

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி, யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற நினைவு நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து... Read more »

கரவெட்டி பிரதேசசபையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணினால் பரபரப்பு!

கரவெட்டி பிரதேசசபையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக பெண்ணொருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லியடியில் தமது பழக்கடையை கரவெட்டி தவிசாளர் அகற்றியதாக குறிப்பிட்ட அந்த பெண், அதை மீள அமைக்க அனுமதிக்கப்படா விட்டால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார். நெல்லியடி சந்தைக்கு அண்மையாக கடையொன்றை... Read more »

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத்தளபதி

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். Read more »

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட... Read more »

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு அரசாங்கம் என்ற ரீதியில்... Read more »

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4... Read more »

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொலிஸார், சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்... Read more »

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திமா... Read more »

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை தவிர வேறு எந்ததொரு மாற்று வழியும் இல்லையென அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். குறித்த... Read more »

பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தங்களது குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு... Read more »