Ad Widget

திருநெல்வேலியில் முடக்கப்பட்ட பகுதிக்குள் 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை!!

கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கு குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது 127 பேர் கொரோனா தொற்றுக்கு...

பொலிஸாரால் தாக்கப்பட்ட மலையக தமிழ் இளைஞன் பொலிஸாரால் கைது!!

மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தரொருவர் இளைஞரொருவரை தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரியவருகிறது. இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு சென்றுள்ளார். மஹரகம...
Ad Widget

கோவிட் -19 தடுப்பூசியை யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்? – மருத்துவ வல்லுநர் குமணன் விளக்கம்

பேராசிரியர். தி.குமணன் பொது மருத்துவ வல்லுநர் மருத்துவத் துறை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம். கோவிட் -19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் உபயோகம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ உலகம் கருதுகின்றது. ஆனால் யாரெல்லாம் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்பதில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் பீதியும் நிலவுகின்றது. அண்மையில் புதுடில்லியின் பொது மருத்துவ வல்லுநர்களின்...

யாழ். பல்கலைக் கழகத்தில் மேலும் இரண்டு பீடங்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகிய இரண்டையும் பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் சிபார்சுடன் துணைவேந்தரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இணையத்தளம் மற்றும் யூடியுப் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 35 வயதான பெண்ணொருவரும் 36 வயதான ஆணொருவரும் இவ்வாறு, நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

முகப்புத்தகத் தொடர்பு – யாழ்.ஊடகவியலாளரிடம் விசாரணை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரையே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிற்கு அழைத்து விசாரணை செய்த பின்னர் விடுவித்துள்ளனர். புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன்...

லொறி சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை!!

கொழும்பு- பன்னிபிட்டிய வீதியில், லொறி சாரதியொருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள,மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரியை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தண்டனை சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென...