Ad Widget

யாழ். மாநகர சபையின் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது

யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது....

சுயதனிமைப்பட்டார் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்!

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சுயதனிமைப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வி.மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வு கடந்த 20ஆம் திகதி பருத்தித்துறையில் நடந்தது. அதில் மணிவண்ணனும் கலந்து கொண்டார். அந்த நண்பருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்ட...
Ad Widget

யாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று...

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவில்...

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 47 உறுப்பு நாடுகளைக்கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்,...