Ad Widget

சட்ட மா அதிபர் யாழ்ப்பாணம் நீதிமன்றுக்கு வருகை!!

சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேரா யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். அவரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வரவேற்றார். வடக்கு மாகாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள சட்ட மா அதிபர் இன்று காலை மன்னாருக்கு வருகை தந்தார். அங்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதிக்கான...

அமைச்சர் டக்ளஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை!- உறவுகள் தெரிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவுகள் சங்கத்தின் தலைவி ஜே.கனகரஞசினி...
Ad Widget

கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக தொழில்களை இழந்தோர்கள் கவனத்திற்கு!!

கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தொழில்களை இழந்தோர்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொள்ள முடியாது போனமை, தொழில் தருநர்களால் தொழில்களை இழந்தமை அல்லது கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் வேறு சிரமங்கள் காரணமாக சுய தொழில்களை இழந்த தனியார் பிரிவுகளில்...

அனுமதி வழங்கப்படாத சீன தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!!

கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என அரச மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இந்தக் கேள்வியை முன்வைத்தார். “ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இன்று வர்த்தக...

வரம்பற்ற இணைய இணைப்பு வசதி ஏப்ரலில் கிடைக்கும்!!

வரம்பற்ற இணைய இணைப்புத் திட்டங்களை (Unlimited Internet Package) ஏப்ரல் மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் திகதிக்குள் வரம்பற்ற இணைய இணைப்புத் திடங்களை முன்வைக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணித்திருந்தது. அதற்கமைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமர்ப்பித்த திட்டங்களை மதிப்பீடு செய்யப்பட்டு...

யாழ்.பல்கலை. மாணவன், மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட 13 பேருக்கு கோரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 248 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....

பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது!!

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கடந்த காலத்தில் அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த...