Ad Widget

யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா நாள்களில் ஆடியபாதம், இராமநாதன் வீதிகளில் ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி

எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இடம்பெற இருப்பதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் படி ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகிய...

2020 O/L பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி!

2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக இம்முறை விசேட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பரீட்சை அனுமதி அட்டையில் காணப்படும் குறைபாடுகளை https://www.doenets.lk/ என்ற திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்....
Ad Widget

கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிகாட்டுவானிலிருந்து நேறறு (21) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்களே இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன்...

தமிழ் தேசியக் கட்சிகள் இணைவில் உருவாகிறது ‘தமிழ் தேசியப் பேரவை’!

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக...

பழ. நெடுமாறன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெறவேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொரோனா தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 83 வயதான பழ. நெடுமாறன் இலங்கை தமிழ் மக்களின் மீது தீவிர பற்றுக் கொண்டவர். இந்நிலையில், அவர்...

ஐ.நா.வின் முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது: அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!!

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபையிட்டு, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்....

வடக்கில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலலேயே ஆறு பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எட்டுப் பேர்...

சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரம் -பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரும் சபாநாயகர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...