
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான... Read more »

யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார். குறித்த விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி புதிதாக தொடங்கும் வியாபார... Read more »

எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி... Read more »

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தால், இந்தியா- அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், குடா நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும்... Read more »

வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் தற்பேர்து கிடைத்துள்ளமை தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண... Read more »

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (புதன்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்றும் மற்றைய மூவரும் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்... Read more »