Ad Widget

வடக்கில் நடந்த பேரணி குறித்து கொழும்பு ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன்? – அமெரிக்கா கேள்வி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அமைதிவழிப் போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும்....

நெடுந்தீவு மக்களிற்கு வன ஜீவராசிகள் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நெடுந்தீவு பிரதேச செயலக பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வர்த்தமானி மூலம் உள்வாங்கப்பட்ட 1,840 ஹெக்ரயர் நிலப்பரப்பில் தனியார் காணிகள் உள்ளடக்கப்பட்டிருப்பின் குறித்த காணி உமையாளர்கள் தமது காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நெடுந்தீவு பிரதேச செயலர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் வடக்கு மாகாண இணைச்செயலாளர் மா.பரமேஸ்வரன்...
Ad Widget

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினி!!

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது. முழு கல்வி முறையையும் தற்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த...

வடக்கில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்...

“ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம்” – கருணா அம்மானுக்கு எதிரான மனு வாபஸ் !

ஆணையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்ற கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது. கடுவல நகரசபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு மீதான விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில்...

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும் – சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்காது என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார். இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு...

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை!! – சுமந்திரன்

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அரசாங்கமே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தெற்கில் உள்ள 15 சிங்கள பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 30 பேரை...

நாட்டில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள் பதிவு – மொத்த எண்ணிக்கை 71ஆயிரத்தைக் கடந்தது

நாட்டில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் மொத்தமாக 976 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 971 பேர் பெலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய நான்கு...