. February 9, 2021 – Jaffna Journal

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி – பருத்தித்துறை நீதிமன்றிலும் வழக்கு தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ்... Read more »

இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஆட்சி செய்யவேண்டும் – சி.வி.விக்னேஸ்லவரன்

இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கின் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்லவரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கள அரசாங்கங்கள் கயிறு கொடுப்பதில் மன்னாதி மன்னர்கள் எனவும் இதை இந்தியா புரிந்துகொள்ள... Read more »

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் – சரத் வீரசேகர

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு தனது உத்தரவின் பேரில் நீக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விசேட அதிரடிப் படை பாதுகாப்பை பெற்றுக்கொண்ட... Read more »

காதலர் தினத்தில் பொலிஸார் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை!!

சுகாதார ஆலோசனைகளை மீறி காதலர் தின களியாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.... Read more »

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருள்களை அகற்ற அமைச்சரவை ஒப்புதல்!!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் சீமெந்து உற்பத்திக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டத்தை தயாரித்துள்ளது. அதற்கமைய, குறித்த வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றி தொழிற்சாலை வளாகத்தை துப்பரவாக்குவதற்கு அவ்விடத்தில் கண்காணிப்புச் சோதனையை நடாத்தி பரிந்துரைகள் அடங்கிய தரவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக... Read more »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 24,25ஆம் திகதிகளில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2 ஆயிரத்து 608 பேர்... Read more »

தமிழ் மொழி மூல பாடசாலைகளில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியராக சந்தர்ப்பம் – ஜனாதிபதி

தோட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தினார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி... Read more »

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக B அறிக்கை தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவுப் பொலிஸாரால் ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த... Read more »

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!!

கொரோனா தொற்று உறுதியாகி யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் நேற்றையதினம் (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை... Read more »

உலகளவில் 90ஆவது இடத்தில் இலங்கை – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 887 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 859 பேருக்கும் சிறைச்சாலை... Read more »