Ad Widget

நீதிமன்றத் தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி- நீராவியடியில் தரிசனம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது. தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன்...

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளுக்கு தடை!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தொல்லையை...
Ad Widget

மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு தடை கோரும் பொலிஸாரின் விண்ணப்பங்கள் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்களால் நிராகரிப்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – முல்லைத்தீவில் வரவேற்க தயார் நிலையில் மக்கள் : தடையுத்தரவுடன் விரைந்த பொலிஸார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவில் நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் தயாரான நிலையிலுள்ளனர். இந்நிலையில், குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடையுத்தரவுடன் வருகை தந்துள்ளனர். அவ்வாறு வருகை தந்த பொலிஸார் தற்போது நிலவும் கொவிட் -19 நிலைமைகளைக் காரணங்காட்டி, பேரணிகள்...

எத்தகைய தாக்குதலுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை- சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து, எம்.கே.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம்...

அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின்...

யாழில் சு.கவின் பேரணியில் கலந்து கொண்ட வாள்வெட்டுக்குழு ரௌடிகள்: பொலிசார் கைது!

யாழில் நேற்று முன்னாள் ஆவாகுழு ரௌடியின் தலைமையில் நடைபெற்ற சிறு குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இருவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். அவர்கள் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என தெரிவித்தே பொலிசார் கைது செய்ய முயன்றனர். ஒருவர் சிக்க, மற்றையவர் தப்பியோடி விட்டார். சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும், இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்களை ஐநா...

போராட்டம் மேலுமொருநாள் நீடிப்பு: 7ஆம் திகதியே யாழ்ப்பாணம் வந்தடையும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பேரணியை முடிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை போராட்டங்களை நடத்த நீதிமன்றங்களின் மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு நாள் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென...

சுதந்திர தினத்தில் வடக்கு- கிழக்கில் கரிநாள்!! நீதிப் போராட்டங்கள் முன்னெடுப்பு!!

இலங்கையின் 73ஆவது சுதந்திர நாள் நேற்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கு – கிழக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில் நேற்று காலை 8.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசியக்கொடியேற்றல், மற்றும் இராணுவ அணிவகுப்புகள் என்பன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...

யாழில் ஆறாம் திகதி ஓரணியாக, பேரணியாகத் திரளுங்கள்- விந்தன் வேண்டுகோள்!

சமய, காலாசார மொழி அடையாளங்களை அழிக்கும் நோக்கில் அரச திணைக்களங்கள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் அத்துமீறிச் செயற்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வடக்கு நோக்கி வருந்துகொண்டிருக்கின்ற நிலையில் இதற்கு அனைத்துத்...

உரிமைப் போராட்டம் நசுக்கப்படுவதால் ஓய்ந்துவிடப் போவதில்லை- மணிவண்ணன்

தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்நியலையில், இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ஊடகங்களுக்குக்...