
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகவும், கருப்புபட்டி அணிந்து 2ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையில் அடையாள உண்ணாவிரதத்திற்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குறித்த அழைப்பு... Read more »

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும்... Read more »

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தும் 14 பேர்... Read more »

வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.... Read more »

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள்... Read more »

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மத நிகழ்வொன்றிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை பலாலி வாசவிலான் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை மேற்பார்வை செய்தார்.... Read more »

கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஆராய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுர சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் 9 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட 9 உள்ளூராட்சி உறுப்பினர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும்... Read more »