Ad Widget

வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் அட்டூழியம்!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள் பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. “பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று அதிகாலை படகில் சென்றேன். அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது...

கொவிட் தடுப்பூசிகளை வழங்க இலங்கையின் அனுமதிக்காக காத்திருக்கும் இந்தியா

தமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான ஒங்குமுறை அனுமதிகளை இலங்கை உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளில் இருந்து பல கோரிக்கைகளை பெற்றுள்ளதாக இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இக் கோரிக்கையைத் தொடர்ந்து, பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர்...
Ad Widget

யாழ்.மாநகரில் ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கோரோனா தொற்று!!!

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....

மன்னாரில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இரண்டாவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருதய நோயாளியான அவர்...

அரிசி, மா, சீனி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நடைமுறையிலிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு விலையின் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கென விநியோகஸ்தர்களுக்கான விலைமனு கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

ஒளடத பாணியை நான் கூறியவாறு பயன்படுத்தாமையே தொற்று ஏற்பட காரணம் – தம்மிக்க

கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக தம்மிக்க பண்டார கூறியவாறு,...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி...