Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவியைக் கோரி மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் மூலமாகவும் மாணவர்களின் போராட்டத்தின் மூலமாகவும்...

அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி!

அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 50 வீதமானோருக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தற்போது நான்கு கொரோனா தடுப்பூசி...
Ad Widget

கொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்றாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தந்திரோபாய அணுகுமுறை அவசியம் என்றும் அது தங்கள் நாட்டிற்கு பொருந்தும் விதத்தில் பயன்படுத்தவேண்டும் எனவும் அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித்...

மண்டைதீவில் கடற்படைக்கு காணி பறிக்கும் முயற்சி மக்களின் எதிர்பால் இடைநிறுத்தம்

மண்டைதீவில் கடற்படையினருக்கு 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக, நில அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. மண்டைதீவு கிழக்குப் பகுதியில் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் பளப்பளவு கொண்ட தனியார் காணியை ஆக்கிரமித்து கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர். இந்தக் கடற்படைத் தளத்துக்காக, 18 ஏக்கர் காணிகளையும் சுவீகரிப்பதற்கு முடிவு செய்துள்ள அரசு, அதற்காக அளவீட்டுப்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவமானது தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் எதிர்ப்புக்களை மேலும்...

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார். மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....