Ad Widget

அலுவலக கடமை நேரங்களை நெகிழ்வான தன்மையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் கவனம்

அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்திற்கு பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதை தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு...

யாழ்.பல்கலை. நினைவுத் தூபி உடைத்ததும் மீள அமைக்கத் தீர்மானித்ததும் துணைவேந்தரும் நிர்வாகமுமே – அரசு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பில் அரசு எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு...
Ad Widget

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டன- அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தொடர்ந்து காணப்படுவதனால் குளத்தின் வான் கதவுகள் 14ம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. இரண்டு வான் கதவுகள் 2 அடியாகவும், 4 வான் கதவுகள் 1 அடி 6 அங்குலமாகவும், 4 வான் கதவுகள் 1 அடியாகவும், 4 வான் கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன...

யாழில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு : தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலை தொடக்கம் இன்று காலை வரை 149.3. மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்துவரும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும்...

இன்று முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன!!

கொரோனா காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் இன்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம், களனிவௌி மார்க்கம் மற்றும் வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. நீண்ட காலத்திற்கு பின்னர் வவுனியா-பெலியத்த புகையிரதம் வழமை போல காலை 03:30 மணிக்கு புறப்படவுள்ளது. எதிர்வரும்...

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...

சுமந்திரனுக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தலதா அத்துகோறள ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரோடு தொடர்புகளைப் பேணிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்தோடு, அவர்களுக்கு பி.சீ.ஆர். பாிசோதனைகளும்...

அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்கின்றன ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா, பைசர் தடுப்பூசிகள்!!

அடுத்த மாதம் ஒக்ஸ்போர்ட் மற்றும் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இந்தியா மூலமாகவும், பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாகவும் அவர்...

யாழ். இளைஞர்களின் புதிய முயற்சி: சூம் செயலியில் அரங்கேறவுள்ளது ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம்!

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காலப்பகுதியில் பலதுறைகளும் பாதிக்கப்பட்டது போன்று நாடகத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்லில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியைப் பயன்படுத்தும் எண்ணம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை நாடகங்களை நிகழ்த்த முடியாத நிலை நீடிக்கின்ற சூழலில் தமிழ் நாடகங்களையும் நிகழ்த்த முடியாதுள்ளது. அந்தவகையில், நாடக உலகில்...

ஜெனீவா கூட்டத்தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.விக்னேஸ்வரன்

ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். ஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வி.விக்னேஸ்வரன், அவரது அலுவலகத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) சென்று கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில், ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில்...