Ad Widget

வவுனியா நகரில் புதிய கொத்தணி!! 54 பேருக்கு கோரோனா தொற்று!!

வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 54 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரில் பசார் வீதி உள்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று 114 பேரிடம் மாதிரிகள்...

யாழ்.மாவட்டத்திற்குள் நுழைவோருக்கு இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை!!

யாழ்.மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களில் பயணிப்போருக்கு இன்று அதிகாலை 3 மணி முதல் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் எழுதுமட்டுவாழ் சந்தியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
Ad Widget

தனியார் கல்வி நிலையங்களை ஜனவரி 25இல் மீள ஆரம்பிக்க அனுமதி!!

தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை வரும் ஜனவரி 25ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு கல்வித்துறையில் தற்போதைய நெருக்கடி நிலமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்...

யாழ்ப்பாணம் விமான நிலையம் விரைவில் மீள திறக்கப்படும்!! – ஜெய்சங்கர்

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து செயற்பாடின்றி முடிங்கியுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் என அரச தரப்பு தெரிவித்துள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பினரை இந்திய வௌிவிவகார அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசியபோது யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மீளத் திறப்பது மற்றும்...

கரவெட்டியில் அதிபர், ஆசிரியர் தனிமைப்படுத்தலில்!!

கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பிரேத்தியேக வகுப்பு நடத்திய பாடசாலை மூடப்பட்டதுடன் அதிபர், ஆசிரியர் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வதிரி திரு இருதயக் கல்லூரியே இவ்வாறு 20ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெறாது தரம் 5 புலமைப்பரிசில்...

யாழில் மதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் புதன்கிழமை மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்தப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் வர்ணப்பூச்சு வேலை இடம்பெற்றுள்ளது. அதற்காக கால் போத்தல் சாராயப் போத்தலில் ரின்னர் விட்டு வைக்கப்பட்டிருந்துள்ளது....

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை 222.3 கிலோ மீற்றர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.3 ரிச்டெர் என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின், நங்குங்குரு குடியேற்றத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 935.0 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- பூநகரிக்கு தப்பி வந்தவர்களும் உள்ளடக்கம்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் மேலும்...

யாழ். பல்கலை மாணவனுக்கு கொரோனா தொற்று: உணவகத்துக்குப் பூட்டு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று...

உடுவில் பகுதியில் வன்முறைக் கும்பல் அட்டூழியம் – சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

உடுவில்- அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துளது. வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பலொன்று, நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் மேற்கொண்டுள்ளது. 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர், முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள்...